நாடாளுமன்றம்- குளிர்கால தொடர் ஒத்திவைப்பு?
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஒத்திவைக்கப் படக் கூடும் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. இந்த கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் சரத்பவார் ஆகியோர் கூட்டத்துக்கு வராததால் இதுகுறித்து முடிவு எடுக்க முடியவில்லை.
கடந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜ எம்பிக்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுப்பினர். கூட்டத் தொடரின்போது எதிர்கட்சியான பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுக்கும். தற்போதுள்ள சூழலில் இதைத் தவிர்க்க கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப் படக்கூடும்.
மேலும், பெங்களூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைக் காரணம் காட்டி லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் நெருக்கடி தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குளிர் கால கூட்டத் தொடரை இப்போது கூட்டுவது உசிதமாக இருக்காது என அரசு கருதுகிறது.
இதுதவிர சுதந்திர தின பாதுகாப்பு மற்றும் கூட்டத் தொடர் பாதுகாப்பை ஒரே நேரத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே ஆகஸ்ட் 11ம் தேதி நடக்க இருந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 15க்கு பிறகு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவியிடம் கேட்டபோது, தீவிரவாதிகளின் தாக்குதல் ஒரு தேசிய துயரம் ஆகும். தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. தீவிரவாத மிரட்டல்களை முறியடிக்க மாநில அரசுகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இருப்பதால் கூட்டத் தொடரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. அதேசமயம், எம்.பிக்களுக்கு லஞ்சம், தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றை கிளப்பி சபையை நடத்த விடாமல் தடுக்க பாஜக முயலும் என்பதால் அதற்கு இடம் கொடுக்க அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே குளிர்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படும் என்றே தெரிகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications