சென்னை ஐஐடியில் காமராஜர் சிலை-சரத் கோரிக்கை
சென்னை: சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் சிலையை நிறுவ தமிழக அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் இன்று விடுத்துள்ள அறிக்கை:
மத்திய அரசாங்கம் நாட்டின் பல பகுதிகளிலும் ஐ.ஐ.டி துவங்குவதற்காக ஆலோசித்துக் கொண்டிருந்த வேளையில், தென் இந்தியாவிற்கென்று ஐதராபாத் நகரை தேர்வு செய்திருப்பதை அறிந்த காமராஜர், உடனடியாக டெல்லிக்கு விரைந்து சென்று அன்றயை பிரதமர் மறைந்த நேருவை சந்தித்து வலியுறுத்தியதோடு அல்லாமல், சென்னை ஐ.ஐ.டி. அமைவதற்கு வேண்டிய நிலம் உட்பட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு சார்பில் இலவசமாக அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை இடம் பெற்று விளங்கிய சென்னை மாகாணத்தில் ஐ.ஐ.டி. அமைய வேண்டிய அவசியத்தையும் காமராஜர் வலியுறுத்தினார்.
ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்த காமராஜரின் வாதத்தில் இருந்த நியாயத்தையும், அவர் காட்டிய ஆர்வத்தையும், உணர்வையும் கண்டு உளம் சிலிர்த்த நேருஜி, பலத்த எதிர்ப்புக் கிடையேயும், காமராஜரின் கோரிக்கைக்கு சம்மதம் அளித்ததின் விளைவே இன்று புகழ் பெற்று பொன் விழா கொண்டாடும் சென்னை ஐ.ஐ.டி. என்பது நாம் அனைவரும் பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
காமராஜரின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்ட ஐ.ஐ.டி.யில் கல்வி கற்று, அதன் மூலம் இன்று உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், பொறியியல் வல்லுநர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்லாது, நம் நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த பெருமைக்கு மூலக்காரணம் காமராஜர் தான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இனிய தருணத்தில் தமிழகத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரை நன்றிப் பெருக்கோடு நினைவு கூறும் விதமாக சென்னை ஐ.ஐ.டி.யின் பொன் விழா ஆண்டில் காமராஜரின் திருவுருவச் சிலையை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நிறுவ வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
சென்னை ஐ.ஐ.டி.யின் பொன் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, மத்திய அரசு அதை நிறைவேற்ற வேண்டுகோள் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications