தீவிரவாதிகளுக்கு மதசார்பற்ற தலைவர்கள் ஆதரவு-பாஜக
சென்னை: மதசார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகள், தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று பாஜக ஆளும் மாநிலங்களில் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டனர். மதசார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகள், தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறார்கள். இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் போலீசாரை பாராட்டுகிறேன். பாஜக அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் 1ம் தேதி தனுஷ்கோடி வருகிறார். ராமர் பாலத்தில் தனுஷ்கோடி யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் பாஜக சார்பில் ராமேஸ்வரத்தில் மீனவர் வாழ்வுரிமை மாநாடு நடத்தப்படுகிறது.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே ஆகியோர் இலங்கையில் அமைதி ஏற்பட ஒப்பந்தம் செய்தனர். அதை இலங்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
அது போல கச்சத் தீவு ஒப்பந்தத்தை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் மீனவர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications