மனைவி-மச்சான்.. குடும்ப அரசியல் இல்லையா: விஜய்காந்துக்கு டிஆர் கேள்வி
சென்னை: மற்ற கட்சிகளை பற்றி பேசும்போது, குடும்ப அரசியல் நடத்துகிறார்கள் என்று சொல்லும் விஜய்காந்தின் கட்சியின் மனைவி மற்றும் மனைவியின் தம்பி என்று குடும்ப அரசியல் தானே நடக்கிறது என லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை கண்டித்து ஆகஸ்டு 3ம் தேதி பழ.நெடுமாறன் தலைமையில் சென்னையில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்கிறேன்.
உயர் நீதிமன்றத்தில் வழக்குமொழியாக தமிழை கொண்டுவர 6.12.2006ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து உண்மை நிலை அறிய தகவல் அறியும் சட்டத்தின்கீழ், மத்திய உள்துறைக்கு விண்ணப்பித்துள்ளேன்.
சேதுசமுத்திர திட்டத்திற்கு மாற்றுப் பாதை பற்றி ஆராய 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதுவரை செலவான பணத்திற்கு என்ன சொல்லப் போகிறார்கள்.
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், காவிரி டெல்டாவை பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டார் என்றும், தொண்டர்களை ஒருமையில் பேசினார் என்றும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இதை சுட்டிக்காட்டி முதல்வசர் கருணாநிதி, விஜயகாந்திடம் கேட்ட கேள்விக்கு, முண்டாசு கட்டிக்கொண்டு பேசியதற்கு மட்டும் அவர் விளக்கம் கொடுத்துள்ளா, மற்ற கேள்விகளுக்கு விஜய்காந்த் பதில் அளிக்கவில்லை. ஏன்?.
தொடர்ந்து 45 நிமிடங்கள் விஜயகாந்தால் பொதுக் கூட்டத்தில் ஒழுங்காக தமிழில் பேச முடியுமா?. மற்ற கட்சிகளை பற்றி பேசும்போது, குடும்ப அரசியல் நடத்துகிறார்கள் என்கிறார். ஆனால், இவரது கட்சியிலேயே மனைவி மற்றும் மனைவியின் தம்பி என்று குடும்ப அரசியல் தான் நடக்கிறது.
தேமுதிகவில் 4 முறை மாவட்ட செயலாளர்களை மாற்றி இருக்கிறார்கள். காரணம் என்ன?. அங்கு பணம் கொடுத்தால்தான் பதவி கொடுக்கிறார்கள். மேலும், ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து பதவி கொடுக்கிறார்கள். இது என்ன ஜாதி கட்சியா?
உழவர் மகன்' படத்தில் முண்டாசு கட்டி கொண்டு நடித்ததற்காக, விஜயகாந்தால் விவசாயி ஆகிவிட முடியாது. உச்சகட்ட தலைக்கனத்தில் இருக்கும் விஜயகாந்த். நான் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் ராஜேந்தர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications