செல்போனை விரும்பாத சிபிஐ இயக்குநர்!
டெல்லி: சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுள்ள அஸ்வனி குமார் செல் போன்களை விரும்பாதவராக இருக்கிறார். அது எனக்கு தேவைப்படவில்லை என்றும் அவர் விளக்கம் தருகிறார்.
நாடெங்கும் தொழில்நுட்பப் புரட்சி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏர் உழவர்கள் முதல் ஏரோபிளேனில் போவோர் வரை செல்போன் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. செல்போன் இல்லாவிட்டால் பலருக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போய் விடும்.
அப்படி ஒரு பரபரப்பான மொபைல் உலகில், செல்போன் சாதனமே கருவியே இல்லாமல், அதுவும், மிக மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒருவர் உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. அவர்தான் சிபிஐ இயக்குநர் அஸ்வனி குமார்.
செல்போன்களை விரும்பாதவராக இருக்கிறார் அஸ்வனி குமார். ஏன் அப்படி என்று அவரிடம் கேட்டால், உண்மைதான், என்னிடம் செல்போன் கிடையாதுதான்.
அது எனக்குத் தேவைப்படவில்லை. எனவேதான் வைத்துக் கொள்ளவில்லை. பெரும்பாலான நேரங்களில் நான் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கிறேன். அங்கு நிறைய லேன்ட்லைன் போன்கள் இருக்கின்றன.
காரில் போனாலும் கூட அதில், ஒயர்லெஸ் கருவி உள்ளது. அதிலும் என்னைத் தொடர்பு கொண்டு விடலாம். அப்படி இருக்கையில் நான் எதற்கு தனியாக செல்போன் வைத்துக் கொள்ள வேண்டும்.?
இருப்பினும், ஒரு வேளை எதிர்காலத்தில் செல்போன் தேவைப்பட்டால் நிச்சயம் நான் ஒரு செல்போனை வாங்கி எனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வேன். மற்றவர்களைப் போல எனது பாக்கெட்டும் செல்போன் சகிதம் வளைய வரும் என்றார் அஸ்வனி குமார்.
வித்தியாசமான அதிகாரிதான்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications