விஜயகாந்த் உறவினர் கிளப்பில் சூதாட்டம்-ரெய்ட், 21 பேர் கைது
சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் உறவினர் நடத்தி வரும் கிளப்பில் போலீசார் திடீர் ரெய்ட் நடத்தி அங்கு சூதாட்டம் ஆடிய 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி 100 அடி சாலையில், தி லீக் கிளப்' என்ற பெயரில் க்ளப் நடத்தி வருகிறார் ராமச்சந்திரன். இவர் விஜயகாந்த் மனைவியின் அக்கா ராதாவின் கணவர்.
3 மாடிக் கட்டிடம் கொண்ட இந்த கிளப்பில் மது பார், பில்லியர்ட்ஸ், இறகுப் பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், உடற் பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், ஆயுர்வேத மசாஜ் நிலையம் போன்ற வசதிகள் உள்ளன.
லீக் கிளப்பில் 1,200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் தங்குவதற்காக அங்கு 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பெரிய பணக்காரர்கள் இங்கு உறுப்பினர்களாக உள்ளனர். மாலை நேரத்தில் கிளப் சுறுசுறுப்பாகி விடும்.
இந்த கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று கிளப்புக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் 21 பேர் ரூ. 3 லட்சத்தை குவித்துப் போட்டு சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து, சூளைமேடு போலீசில் ஒப்படைத்தனர். ரூ.3 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், லீக் கிளப்பில் உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது. உறுப்பினர்களின் உறவினர், நண்பர்கள் செல்லலாம்.
அந்த வகையில் சென்னை ஏழுகிணறைச் சேர்ந்த ஏமநாதன் தனது நண்பர்களுடன் சென்று அங்கு சூதாட்டம் ஆடி இருக்கிறார். அருகில் உள்ள அறையில் புதுச்சேரியைச் சேர்ந்த சினிமா வினியோகஸ்தர்கள் 5 பேர் தங்கி இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து இவர்களும் சூதாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலதிபர்கள். சிலர் அரசு ஊழியர்கள். சூதாட்டம் ஆடிய ஏமநாதன், பாஸ்கர், மணி, ரவி, ராமலிங்கம், நடராஜ், ஜெய்சங்கர், சுரேஷ்குமார் ஆகியோர் உட்பட 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ரவி, ராமலிங்கம், நடராஜ், பாஸ்கர் ஆகியோர் குசேலன் படத்தை வாங்குவதற்காக புதுச்சேரியில் இருந்து இங்கு வந்ததாகத் தெரிகிறது. இவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிளப் மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications