சென்னை விமான நிலையத்தில் கார்களுக்கு தடை
சென்னை: பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலைய பிரதான சாலையில் கார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் மற்றும் அகமதாபாத் தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதல் லிஸ்டில் சென்னையும் இடம் பெற்றிருப்பதால் சென்னை மாநகர் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் முழுவதுமாக முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலைய வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் உள்ள முதல் பிரதான சாலையில் கார்கள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களின் கார்களுக்கு மட்டுமே வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
மற்ற வாகனங்கள் கார் நிறுத்துமிடம் வழியாக உள்ள பிரதான பாதையை பயன்படுத்துமாறு விமான நிலைய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. ஆனால் அதில் வெறும் துணிகளும், வாட்ச் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் அங்கு அமைதி திரும்பியது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications