காங்கிரஸார் மெத்தனமாக இருக்கக் கூடாது: சோனியா
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று விட்டோம் என்று மெத்தனமாக இருந்து விடாமல் காங்கிரஸார் தொடர்ந்து சோர்வின்றி, தொய்வின்றி செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான காங்கிரஸ் சந்தேஷில், காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
விலைவாசியைக் குறைப்பதிலும், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு செயல்படுகிறது.
ஜூலை 22ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நாம் வெற்றி பெற்று விட்டோம். இருப்பினும் அதற்காக மெத்தனமாக இருந்து விடாமல் தொடர்ந்து தொய்வின்றி, சோர்வின்றி காங்கிரஸார் உழைக்க வேண்டும்.
அணு சக்தி ஒப்பந்தம் திட்டமிட்டபடி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து பண வீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் குறைக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனி கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார்.
எதிர்பாராத எண்ணை விலை உயர்வு, பிற அத்தியாவசியப் பொருட்களின் உலகளாவிய விலை உயர்வு ஆகியவை நமது நாட்டில் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாகி விட்டன.
இருப்பினும் நாட்டின் விவசாய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகியவற்றில் எந்தவித குறையும் இல்லை என்பது இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஆறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் விரைவில் வருகின்றன. இதற்கு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தயாராக வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற சந்தோஷமும், தெம்பும் நம்மிடம் இருந்தாலும், அதை மனதில் கொண்டு மெத்தனமாக இருந்து விடக் கூடாது. நாம் போக வேண்டிய பாதை இன்னும் உள்ளது. சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதை அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து சந்தித்து சமாளித்து வெற்றி பெற வேண்டும்.
கட்சியின் அனைத்து மட்டத்திலும் ஒற்றுமை, கட்டுப்பாடு, சோர்வின்றி உழைக்கும் தன்மை இருக்க வேண்டும் என கூறியுள்ளார் சோனியா காந்தி.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications