அரசு மரியாதையுடன் சுர்ஜித் உடல் இன்று தகனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவரது உடல் தகனம் இன்று மாலை 5 மணிக்கு டெல்லி நிகம்போத் மயானத்தில் நடைபெறுகிறது.
முழு அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை டெல்லி திரும்புகிறார். விமான நிலையத்திலிருந்து அவர் நேரே மயானத்திற்கு வரக் கூடும் எனத் தெரிகிறது.
இன்று காலை முதல் சுர்ஜித்தின் உடல் சிபிஎம் தலைமையகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.
சுர்ஜித்தின் உடலுக்கு அருகே பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி, எஸ்.ஆர். பிள்ளை, பிருந்தா காரத் உள்ளிட்டோர் சோகத்துடன் நின்றிருந்தனர்.
சுர்ஜித்தின் மனைவி பிரீத்தம் கெளர், அவரது இரு மகன்களான குருசேத்தன், பரம்ஜீத் ஆகியோரும் உடன் இருந்தனர்.
முன்னாள் பிரதமர்கள் தேவெ கெளடா, ஐ.கே.குஜ்ரால், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், வயலார் ரவி, எம்.எஸ்.கில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வி.கே.மல்ஹோத்ரா, சமாஜ்வாடி தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அமர்சிங், அகாலிதள தலைவர் எஸ்.எஸ்.பாதல், இடதுசாரி தலைவர்கள் ராஜா, அபான் ராய், தெலுங்கானா ராஷ்டிரிய சமித தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
சீனா, கியூபா, ஈரான், வியட்நாம், வட கொரியா, நேபாளத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளும் வந்திருந்து சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி, உ.பி. முதல்வர் மாயாவதி ஆகியோரது சார்பில் மலர் வளையங்கள் வைக்கப்பட்டன.
இறுதிச் சடங்கில், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி, மூத்த தலைவர் ஜோதிபாசு உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications