சோம்நாத் நீக்கம் துரதிர்ஷ்டம்-பிரகாஷ் காரத்
டெல்லி: சோம்நாத் சட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியது துரதிர்ஷ்டவசமான முடிவு என்கு மாக்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், சோம்நாத் சட்டர்ஜின் நீக்கம் குறித்து கூறியதாவது: சோம்நாத்தை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷவசமான நிகழ்வு. ஆனால் கட்சி கட்டுப்பாட்டை காப்பதில் உறுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு வராது. அதுவும் சோம்நாத் சட்டர்ஜி போன்ற பொறுப்பான இடத்தில் இருப்பவருக்கு எதிரான இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானதுதான்.
சபாநாயகர் பதவியை மிகவும் மதிக்கிறோம். அந்த பதவிக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ விரும்பவில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபட கூறியிருக்கிறேன்.
கட்சி தாவல் அல்லது தகுதி இழப்பு தொடர்பான கேள்விகளுக்குள் செல்ல விரும்பவில்லை. சபாநாயகர் பதவியில் நீடிப்பது என்பது அவரது முடிவு. கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது என்பது கட்சி முடிவு.
கடந்த 21,22ம் தேதிகளில் நடந்த நம்பிக்கை தீர்மான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்போது சபாநாயகர் பதவியில் நீடிப்பது என்று அவர் முடிவு செய்தபோதே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.
சபாநாயகர் பதவியை பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள நடைமுறை வேறு. இங்கிலாந்தில் உள்ள நடைமுறை வேறு. இரண்டையும் ஒப்பிடுவது சரியல்ல. இந்தியாவின் சபாநாயகராக ஆகி பாரபட்சமற்ற முறையில் அவர் செயல்பட்டு வந்தாலும் கட்சியுடன் அவருக்கு உள்ள தொடர்பு நீடித்து வருகிறது.
லோக்சபாவின் முன்னாள் சபாநாயகர்கள் சிவராஜ் பாட்டீல், பி.ஏ.சங்மா, மனோகர் ஜோஷி ஆகியோர் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொடர்பை முறித்துக் கொள்ளவில்லை. சபாநாயகர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் தங்கள் கட்சியுடனான தொடர்பை விட்டுவிடவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications