புதுக்கோட்டையில் சிபிஎம் மாநிலக் குழு கூட்டம்
புதுக்கோட்டை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டம் வரும் 6, 7 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டம் வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் புதுக்கோட்டையில் உள்ள நடைபெற உள்ளது.
மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை கம்யூனிஸ்ட்கள் மத்தியில் விலக்கிக் கொண்ட பிறகு மாநிலத்தில் கம்யூனிஸ்ட்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அப்போது திமுக உடனான உறவு குறித்து வரதராஜனிடம் கேட்டதற்கு, நல்லது செய்தால் ஆதரிப்போம், இல்லையேல் மக்களை திரட்டி போராடுவோம் என்று கூறினார்.
இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் தமிழக அரசியில் நிலவரம், மீனவர்கள் பிரச்சனை, போன்ற பல முக்கிய பிரச்சனைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.


Click it and Unblock the Notifications
