எல்ஜி, செஞ்சி- விரைவில் திமுகவில் முழு ஐக்கியம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: போட்டி மதிமுகவின் எம்பிக்களான எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் விரைவில் மீண்டும் திமுகவில் இணைய உள்ளனர்.

இது குறித்து எல். கணேசன் ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசுக்கு ஆதவாக வாக்களிப்பதா, அல்லது எதிராக வாக்களிப்பதா என்று தமிழக முதல்வர் கருணாநிதியுடன் கலந்து பேசினோம். அதில் ஆதரவாக வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நானும், செஞ்சி ராமச்சந்திரனும் ஆதரவாக வாக்களித்தோம்.

ஆனால் நாங்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என மதிமுக கொறாடா கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை மீறி வாக்களித்தால் என்னையும், செஞ்சி ராமசந்திரனையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளார்.

ஆனால் உண்மையான அவைத் தலைவர் நான் தான். என்னை யாராலும் கட்சியை விட்டு நீக்க முடியாது. அவைத் தலைவர் என்ற முறையில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகிய இரு எம்பிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினேன்.

ஆனால் அவர்கள் அதையும் மீறி மத்திய அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதனால் அவர்களை கட்சியில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளேன். நானும், செஞ்சி ராமச்சந்திரனும் திமுகவில் விரைவில் இணைய உள்ளோம். அதற்கான முறையான அறிவிப்பை திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்றார்.

திமுகவில் மூத்த தலைவர்களாக இருந்த இருவரும் வைகோ கட்சி ஆரம்பித்தபோது அவருடன் பிரிந்து சென்றது நினைவுகூறத்தக்கது. இப்போது மீண்டும் திமுகவுக்கே திரும்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+