வேலூரைப் பிரித்து திருப்பத்தூரை மாவட்டமாக்க பாமக கோரிக்கை
வேலூர்: வேலூரை இரண்டாகப் பிரித்து, திருப்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
வேலூரில் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஜி.கே.மணி பேசுகையில், மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்காக போராடுகிற ஒரே கட்சி பாமகதான். பாமக ஆதரவு இல்லாமல் வேலூர் மாவட்டத்தில் எந்த ஒரு தொகுதியிலும் யாரும் வெற்றிப்பெற முடியாது.
பாமகவை அழிக்க வேண்டுமென்று நினைக் கிறார்கள். எந்நாளும் அது நடக்காது.
வருகிற 23ந் தேதி பாமக மகளிரணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு வேலூரில் நடக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டுமென்று கோரியதாலும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய தாலும் திமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற்றப்பட்டது என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேலூர் மாவட்டம் 150 கி.மீ. பரப்பளவுடன் பெரிய மாவட்டமாக உள்ளது. இதனை இரண்டாக பிரிக்க வேண்டும். திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதை ஏற்கனவே அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதை உடனே அறிவிக்க வேண்டும்.
அதேபோல தஞ்சாவூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றார் மணி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications