சென்னையில் இன்னொரு விடுதலைப் புலி கைது
சென்னையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீழ்கட்டளை பஸ் நிலையத்தில் இவரை க்யூ பிராஞ்ச் போலீசார் நேற்றிரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது பெயர் செல்வகுமார் (31).
இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த அவரிடமிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் செல்போன்கள் மூலம் மோட்டர்களை இயக்க உதவும் சுவிட்சுகள், நேனோ பவர் ஸ்டேனசன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஜீவன் என்ற இனியவனுக்கு நெருக்கமானவர் என போலீசார் தெரிவித்தனர். ஜீவன் சொன்னதன்பேரிலேயே இவர் இந்த கருவிகளை மடிப்பாக்கத்தில் ஒரு கடையில் வாங்கியுள்ளார்.
இவற்றை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தார். இவர் 1997ம் ஆண்டே இந்தியாவுக்கு வந்துவிட்டார். தொடர்ந்து புலிகளுக்கு உதவி வந்துள்ளார். சென்னையில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார்.
இன்று காலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 6 மாத காலத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள எல்டிடிஇ இயக்கத்தைச் சேர்ந்த எட்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications