தீவிரவாத்த்துக்கும் ஐஎஸ்ஐக்கும் தொடர்பில்லை-முஷாரப்
கராச்சி: ஐஎஸ்ஐதான் பாகிஸ்தானின் முக்கிய பாதுகாப்பு அரண் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு உதவுவதாக பாகிஸ்தான் மீது அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. காபூலில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐதான் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுப் பட்டியிலில் ஆப்கானிஸ்தானும் உள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் வாஷிஙடனுக்குச் சென்றிருந்தபோது, இதுகுறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் அதிபர் புஷ்.
இனியும் பாகிஸ்தானிடம் மென்மையாக நடந்துகொள்ள முடியாது, என அவர் கூறிவிட்டார்.
தற்போது இந்தியா மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.
கராச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று அவர் பேசியதாவது: பாகிஸ்தானின் முக்கிய பாதுகாப்பு அரணே ஐஎஸ்ஐதான்.
இந்த அமைப்பைக் குற்றம்சாட்டுவது நாட்டையே பலவீனப்படுத்துவதற்குச் சமம்.
தீவிரவாதத்துக்கு எதிராகத்தான் ஐஎஸ்ஐயும் போராடி வருகிறது. ஐஎஸ்ஐ மீது நடவடிக்கை எடுத்தால் நாட்டின பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும். ஐஎஸ்ஐ நாட்டுப்பற்று கொண்ட பாதுகாப்பு அமைப்பு. நாட்டின் ஸ்திரதன்மையையும் ஐஎஸ்ஐதான் பாதுகாத்து வருகிறது. இது நாட்டின் கவுரவம்.
பாகிஸ்தான் பயங்கரவாத நாடல்ல!
பாகிஸ்தானை பயங்கரவாதிகளின் நாடு என்று இந்த உலகம் சொல்கிறது. ஆனால் அது உண்மையல்ல என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்போது உள்ளோம்.
நடுநிலையான, சுதந்திரமான பாகிஸ்தான் வேண்டுமா, பயங்கரவாத மற்றும் தீவிரவாதிகளின் பாகிஸ்தான் வேண்டுமா என்பதை நாம் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் பொருளாதாரம் மிகவும் அபாயகரமாக உள்ளது. பொருளார நிலை மிகவும் நலிந்துள்ளது. இதுபோன்ற பொருளாதார நிலையில் பாகிஸ்தானை வாழ்விப்பது மிகவும் கடினம் என்று கூறினார்.
உளவுத்துறையை உள்துறையின் கீழ் கொண்டு வரப்போவதாக பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதை திரும்ப பெற வேண்டும் என்று முஷாரப்பும் ஆயுதப்படையும் அரசை நிர்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications