துபாயில் உள்ள இந்திய தூதரகம் திடீரென மூடல்.. பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்திவைப்பு! என்னாச்சு
துபாய்: அமீரகத்தில் பல லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அங்கு நடக்கும் ஒவ்வொரு சின்ன மாற்றமும் கூட பெரிய கவனத்தை பெறுவதாகவே இருக்கிறது. இதற்கிடையே துபாயில் செயல்பட்டு வந்த இந்திய துணை தூதரகம் திடீரென தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
வேலைவாய்ப்பிற்காகப் பல லட்சம் இந்தியர்கள் வளைகுடா செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக தென்னிந்தியர்கள் அதிகளவில் அமீரகத்திற்கு வேலைக்காக செல்கிறார்கள். பல ஆண்டுகள் அங்கேயே கஷ்டப்பட்டு வேலை செய்யும் இந்தியர்கள், ஓரளவுக்கு பணத்தை சேமித்த பிறகே தாயகம் திரும்புவார்கள்

தூதரகம் மூடல்
இப்படி பல லட்சம் இந்தியர்கள் அமீரகத்தில் இருப்பதால் அங்கு நடக்கும் ஒவ்வொரு மாற்றமும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சூழலில் தான் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு வந்துள்ளது. அதாவது தூதரகம் அமைந்துள்ள பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்திய துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
3 நாட்கள்
அதன்படி துபாய் துணை தூதரகம் இன்று ஜூலை 17 காலை முதல் ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு முழுமையாக மூடப்படும். சாலை பராமரிப்பு பணிகள் காரணமாக தூதரகம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட், விசா மற்றும் ஆவண அட்டெஸ்டேஷன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. எனவே, இந்த நாட்களில் தூதரகத்திற்கு வர திட்டமிட்டிருந்த இந்தியர்கள் வேறு தேதிகளுக்கு தங்கள் பிளான்களை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் மூன்று நாட்களுக்கு பிறகு, பாஸ்போர்ட் விசா அட்டெஸ்டேஷன் சேவைகள் ஜூலை 20 திங்கட்கிழமை முதல் மீண்டும் வழக்கம்போல் தொடங்கும். இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஜூலை 19 அன்று இரவு 8 மணி முதல் ஓபன் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவை இருப்போர்!
தூதரகம் மூடப்பட்டு இருந்தாலும் அவசரமாக தூதரக சேவை தேவைப்படுவோர் என்ன செய்யலாம் என்பது குறித்தும் தூதரகம் விளக்கியுள்ளது. அதாவது துபாயில் மட்டுமே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் பாஸ்போர்ட், விசா மற்றும் அட்டெஸ்டேஷன் சேவைகள் ஜூலை 17 வெள்ளிக்கிழமை வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவசர சேவைகள் தேவைப்படுவோர் அபுதாபி இந்திய தூதரகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
அமீரகம்
துபாய் மற்றும் அமீரகத்தில் பல லட்சம் இந்தியர்கள் வசிக்கும் நிலையில், அவர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஸ்போர்ட் புதுப்பித்தல், விசா தொடர்பான பணிகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆவண சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற சேவைகளை இந்த 3 நாட்களில் பெற திட்டமிட்டிருந்தவர்கள் வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைப் பணிகள் நிறைவடைந்தவுடன் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் மீண்டும் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்போது அமீரகத்தில் கோடை விடுமுறை விடுமுறை இருக்கும் சூழலில், பலரும் இந்தியா வர திட்டமிட்டுள்ளனர். இந்தச் சூழலில் தான் தூதரக மூடல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. எனவே, இந்தியர்கள் அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டியது அவசியம். 3 நாட்களில் சேவை வழக்கம் போல ஆரம்பிக்கும் என்றாலும் அதற்குள் எமர்ஜென்சி என்றால் அபுதாபி தூதரகத்திற்கு செல்லலாம்















Click it and Unblock the Notifications