அணு ஒப்பந்தம்-செப் 8ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்!
வாஷிங்டன்: இந்தியாவுடனான அணு ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரும் செப்டம்பர் 8ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்ததுக்கு முதலில் சர்வதேச அணு சக்திக் கழகம் (IAEA) ஒப்புதல் தர வேண்டும். இதற்காக இந்த ஒப்பந்தம் ஐஏஇஏவிடம் சமர்பிக்கப்பட்டு, விவாதி்க்கப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் (Nuclear Suppliers Group-NSG) இந்த ஒப்பந்ததை ஏற்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நாடுகளிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்ற அமெரிக்காவும், இந்தியாவுக்காக ரஷ்யாவும் களமிறங்கியுள்ளன. இந்த மாத இறுதியில் இங்கும் அனுமதி பெறப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.
இதையடுத்து இந்த ஒப்பந்தந்துக்கு அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) ஒப்புதல் தர வேண்டும். அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக் காலம் முடியப் போகும் நிலையில் இந்த ஒப்பந்தத்துக்கு தனது ஆட்சியிலேயே அனுமதி பெற்றுவிடும் தீவிரத்தில் இருக்கிறார் புஷ்.
என்எஸ்ஜியின் அனுமதி கிடைத்தவுடன், வரும் செப்டம்பர் 8ம் தேதியே இந்த ஒப்பந்தந்துக்கு அனுமதி கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புஷ் மசோதா தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கொன்ஸாலோ கல்லேகோஸ் இதனை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ஐஏஇஏ அனுமதி கிடைத்துவிட்டது. அடுத்து என்எஸ்ஜி நாடுகளிடமும் இந்த மாத இருத்திக்குள் அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறோம். இதையடுத்து செப்டம்பர் 8ம் தேதி காங்கிரசில் ஒப்பந்தத்தை தாக்கல் செய்வோம்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலக அணு அமைதிக்கும் முக்கியமானது. வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயல்வோம என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications