காங்கோ: இந்திய வீரர்களிடம் 67 தீவிரவாதிகள் சரண்
டெல்லி: காங்கோவில் அமைதி காக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களிடம் 67 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோ, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூவாண்டோ புரட்சிகர ஜனநாயக படைகள் என்ற அமைப்பு, ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது. இந்த அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பலர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
காங்கோவில் ஐநா சார்பில் அமைதி காக்கும் குழு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், அமைதி காக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் மீது ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், தங்கம் கடத்தியதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இந் நிலையில், அமைதி காக்கும் குழுவில் உள்ள இந்திய வீரர்கள், பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 67 பேரை சரணடைய வைத்து சாதனை படைத்துள்ளனர்.
ஆப்கானிலும் வெற்றி:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்-கடத்தலில் ஈடுபட்டு வந்தாலும் அங்கு மேற்கொண்டிருந்த நெடுஞ்சாலைப் பணியை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தான் நாட்டை, மறுசீரமைக்கும் பணியில் இந்தியாவும் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில், சரஞ்ஜ்-தேலாராம் இடையே 218 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. இந்த நெடுஞ்சாலை, இந்தியாவை மத்திய ஆசிய நாடுகளுடன் இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாலை அமைக்கும் பணியை இந்தியர்கள் மேற்கொண்டிருந்தபோது, தலிபான் பயங்கரவாதிகள் பல முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில், இந்தியர்கள் சிலர் உயிரிழந்தனர். சிலரை கடத்தியும் சென்றனர்.
இருந்தபோதிலும் சாலை அமைக்கும் பணி தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு முடிந்துள்ளது. இந்த சாலை விரைவில் ஆப்கன் அரசிடம் விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளது.
-
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ்












Click it and Unblock the Notifications