ஓட்டுக்கு நோட்டு-சக்ஸேனாவை விசாரிக்க முடிவு
டெல்லி: மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜக எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, அது தொடர்பாக கிடைத்துள்ள வீடியோவை விசாரணை குழு பார்த்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டு போடும்படி தங்களுக்கு ரூ.1 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக அவற்றை காட்டி லோக்சபாவில் பாஜக எம்பிக்கள் 3 பேர் புகார் கூறினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி 7 பேர் கொண்ட எம்பிக்கள் குழுவை அமைத்தார்.
காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திரதேவ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் வி.கே.மல்கோத்ரா (பாஜக), முகமது சலீம் (சிபிஎம்), ராம்கோபால் யாதவ் (சமாஜ் வாடி) தேவேந்திர பிரசாத் யாதவ் (ராஷ்டீரிய ஜனதா தளம்), ராஜேஷ் சர்மா (பகுஜன் சமாஜ்), குப்புசாமி (திமுக) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள ரகசிய வீடியோ சபாநாயகர் சோம்நாத்திடம் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை விசாரணை குழுவினர் பார்த்தனர்.
சஞ்சீவ் சக்ஸேனா என்பவர் பணத்தை எடுத்து வெளியே வைப்பது அதில் பதிவாகியுள்ளது. ஆனால், அதில் பதிவாகியுள்ள பேச்சு தெளிவில்லாமல் உள்ளதாம்.
எனவே பேச்சு பகுதியை முழுமையாக டைப் செய்து தருமாறு நாடாளுமன்ற செயலகத்துக்கு விசாரணைக் குழு உத்தரவிட்டது.
அடுத்த கட்ட விசாரணை 7ம் தேதி நடக்க உள்ளது. அப்போது எம்பிக்களுக்கு நேரில் பணத்தை கொடுத்த சஞ்சீவ் சக்சேனாவிடம் விசாரணை நடத்த குழு தி்ட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த வீடியோவை படம் எடுத்தவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications