'வீடியோகான்': மகாராஷ்டிர முதல்வர்-அமைச்சர் மோதல்
மும்பை: மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக், அவரது அவரது பரம எதிரியான அமைச்சர் நாராயண் ரானே இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
நவிமும்பை பகுதியில் வீடியோகான் நிறுவனம் எல்சிடி தொழிற்சாலை அமைக்க 250 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார் விலாஸ்ராவ்.
இது தொடர்பாக தன்னுடனோ பிற அமைச்சர்களுடனோ முதல்வர் விவாதிக்கவில்லை என்றும், மார்க்கெட் விலையை விட மிக மிகக் குறைவான விலைக்கு இதை வீடியோகானுக்கு வழங்கியுள்ளதாகக் கூறி ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் ரானே.
ரூ. 3,000 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ. 300 கோடிக்கு தந்துள்ளார். இதைக் கூட வீடியோகான் தவணை முறையில் தான் தரப் போகிறதாம். இதனால் இந்த நில விற்பனையை ஏற்க முடியாது என்று கூறியுள்ள ரானே, நிலத்தை ஏலத்துக்கு விட வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஆனால், இந்த மோதலின் பின்னணியில் சில கார்போரெட் நிறுவனங்கள் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலத்தை குறி வைத்து தங்களுக்குக் கிடைக்காமல் போனதால் ராணே மூலமாக அரசுக்கே தொல்லை தரும் வேலைகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் ராஜினாமா செய்யப் போவதாக ராணே மிரட்டுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications