வாக்காளர் பட்டியல்-அலட்சிய ஊழியர்கள், குப்தா எச்சரிக்கை
சென்னை: வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சட்டசபை தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியுள்ளது. இதற்காக பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களின்போது, முகாம்கள் சரியாக செயல்படவில்லை என்று புகார்கள் வந்துள்ளன.
ஒரு மையத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர் (ஆசிரியர்) வீடு வீடாகச் சென்று அந்த குடும்பங்களில் விடுபட்டவர்களிடம் படிவங்களைக் கொடுத்து அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக, அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் படிவங்களைக் கொடுத்துள்ளார். இதற்காக அந்த அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு மையத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர் (ஆசிரியர்), அங்கிருப்பவர் மூத்த அதிகாரி என்பது தெரியாமல் அவரிடமே, வீடு வீடாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பேசியுள்ளார். சம்பந்தப்பட்ட அந்த அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பட்டியலை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டியது அவசியம். அவ்வாறு செல்லும்போது, பட்டியலில் பெயர் உள்ளவர்களிடம் அவர்களது பெயர்கள் அடங்கிய துண்டுச் சீட்டை கொடுத்துவிட்டு வீட்டு வாசலில் ஸ்டிக்கர் ஒட்டியாக வேண்டும்.
பெயர்கள் விடுபட்டிருந்தால், 6ம் எண் படிவத்தை கொடுத்து பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு, வீடு வீடாக சரிபார்ப்பதற்கு ஆகஸ்ட் 18ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த அவகாசம் மேலும் 7 முதல் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியில் ஏதாவது சுணக்கமோ, குறைபாடுகளோ காணப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்கப்படுமென வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்து அதிகாரிகளும் எச்சரிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார் குப்தா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications