அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை
நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் உடனே கைது செய்தனர்.
அமெக்காவின் அரிஸோனோ நகரில் வசித்தவர் இந்தர்ஜித் ஜஸ்ஸல் (62). அங்குள்ள பல்பொருள் கடையில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார்.
அந்த கடைக்கு ஆப்பிரிக்க-அமெரிக்க வாலிபரான ஜெர்மைன் கனடா (27) என்பவர் கையில் ஒரு குழந்தையுடனும், இன்னொரு சிறுவனை அழைத்துக் கொண்டும் கடைக்கு வந்தார்.
இந்தர்ஜித்திடம் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டார் இதில் இந்தர்ஜித் அந்த இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஜெர்மைன் கனடாவை உடனே சுற்றி வளைத்து கைது செய்தனர். கிரிமினல் குற்றவாளியான ஜெர்மைன் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானார். அவர் மீது போதை மருந்து பிரயோகம், தாக்குதல், ஆயுதங்களை தவறாக பயன்படுத்தியது உள்பட பல வழக்குகள் உள்ளன.
'இந்தர்ஜித்தை கொலை செய்யும் நோக்குடன் ஜெர்மைன் இதை செய்யவில்லை. அங்கிருந்த வீடியோ கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தால், இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
அது சண்டைப்போட்டுக் கொண்டதாகவோ, விவாதமாகவோ தெரியவில்லை. அவர்களுக்குள் முன் விரோதம் இருப்பதாக தெரியவில்லை. ஜெர்மைன் திடீரென்று துப்பாக்கியால் இந்தர்ஜித்தை சுட்டு கொன்றுள்ளார். போதையில் இந்த கொலையை செய்தாரா என்பது தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications