அகமதாபாத்: 3 தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு
Subscribe to Oneindia Tamil

ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குஜராத் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குற்றவாளிகள் என சந்தேகப்படும் 3 பேரின் வரைபடங்களை குஜராத் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை இணை ஆணையர் எச்.பி.சிங் கூறுகையில், ரெய்ப்பூர், ஹத்கேஸ்வர், நரோல் ஆகிய பகுதிகளில் இவர்கள் குண்டு வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறோம். குற்றவாளிகள் குறித்து கிடைத்த தகவல்கள், சாட்சிகள் கூறியஅடையாளங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த படங்கள் வரையப்பட்டுள்ளன என்றார் அவர்.
--












Click it and Unblock the Notifications