மாமுல் லடாய்-ஏட்டு பல்லை உடைத்த எஸ்ஐ!
திண்டுக்கல்: மாமுல் பணத்தை பிரித்துக் கொள்வதில் எஸ்ஐக்கும் ஏட்டுக்கும் கைகலப்பானது. இதில் எஸ்ஐ தாக்கி ஏட்டுவின் பல் உடைந்தது.
திண்டுக்கல் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலைய எஸ்ஐ மனோகரன். இதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் அண்ணாமலை. இருவருக்கும் மாமூல் பணத்தை பிரித்துக் கொள்வதில் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் மோதலும் ஏற்படுமாம்.
இந்த நிலையில், கடந்த 5ம் தேதியும் மாமுல் பங்கு பிரிப்பதில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏட்டு அண்ணாமலையை எஸ்ஐ மனோகரன் தாக்கியுள்ளார். இதில் அண்ணாமலையின் பல் உடைந்தது.
வாயில் ரத்தம் கொட்ட வலியால் துடித்த அண்ணாமலையை சக போலீசார்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். இதையறிந்த மாவட்ட எஸ்பி பாரி இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் இருவரும் மோதிக் கொண்டது உறுதியானது. இதையடுத்து இருவரையும் எஸ்பி பாரி கண்டித்தார். இதனையடுத்து, ஏட்டு அண்ணாலை கண்ரோல் ரூமிற்கு மாற்றப்பட்டார்.












Click it and Unblock the Notifications