கருத்துக் கணிப்பில் மெக்கெய்னுக்கு உயர்வு - ஓபாமாவுக்கு சறுக்கல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாரக் ஓபாமாவுக்கும், ஜான் மெக்கெய்னுக்கும் இடையிலான வித்தியாசம் சற்று குறைந்திருக்கிறது. இதனால் ஓபாமா வட்டாரம் சற்றே கலங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கடும் பிரயத்தனத்திற்குப் பின்னர் பாரக் ஓபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கெய்னும் வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர்.

இதையடுத்து இரு வேட்பாளர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போட்டியில் தற்போது ஓபாமா முன்னிலையில் இருந்து வருகிறார். அவரது கொள்கைகள், பேச்சு, ஸ்டைல், செயல்பாடுகள் அமெரிக்கர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

சமீபத்தில் அவர் ஈராக், ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணமும் சென்று வந்தார். ஈராக் விவகாரத்தை விட ஆப்கானிஸ்தானில்தான் அமெரிக்கா அதிக கவனம் செலுத்த வேண்டும். அங்குதான் தீவிரவாதம் மீண்டும் தலையெடுத்து வருகிறு என்று கூறி வருகிறார் ஓபாமா.

இந்த நிலையில், அவருக்கு அமெரிக்கர்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சிபிஎஸ் நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், கடந்த மாதத்தை விட இந்த மாதம் 4 சதவீத வாக்குகளை இழந்துள்ளார் ஓபாமா.

ஓபாமாவுக்கும், மெக்கெய்னுக்கும் இடையிலான வித்தியாசம் வெகுவாகக் குறைந்து விட்டதாகவும் இது தெரிவித்துள்ளது. ஓஹையோ, புளோரிடா உள்ளிட்ட சில முக்கிய மாகாணங்களில் மெக்கெய்னுக்கு செல்வாக்கு அஏதிகரித்துள்ளது.

மின்னெசோட்டாவில் மெக்கெய்னுக்கு நல்ல முன்னிலை கிடைத்துள்ளது.

ஓபாமாவின் செல்வாக்கு குறைவதாக வெளியாகியுள்ள செய்தியால் அவரது தரப்பினர் கவலை அடைந்துள்ளனர். ஓபாமாவின் செல்வாக்கை அதிகரிக்கும் யுத்திகளை யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+