இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்-வீடுகள் தரைமட்டம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் சும்பாவா தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சும்பாவா தீவில் இன்று காலை 6.41 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாக பதிவாயிருந்தது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். பீதியின் காரணமாக தெருவிலேயே நீண்ட நேரம் நின்றிருந்தனர்.
இதனால் சம்பாவா தீவின் கடற்கரையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. பள்ளிக் கட்டடங்களும் இடிந்து தரைமட்டமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 4 பேர் படுகாயமடைந்தனர். உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சுனாமி குறித்து எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அங்கு தொடர்ந்து பீதியும் பதட்டமும் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications