பிரதமரின் ஆலோசகர் ரங்கராஜன் ராஜினாமா-எம்.பியாகிறார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து சி.ரங்கராஜன் இன்று ராஜினாமா செய்தார். அவர் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடு்க்கப்படவுள்ளார்.
இதற்கு முன் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், ஆந்திர மாநில கவர்னராகவும் பதவி வகித்தவர் ரங்கராஜன். இந்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
இவரது பொருளாதார அறிவைப் பார்த்து தனது பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவராக நியமித்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆலோசனைக் குழு தனது பொருளாதார ஆய்வறிக்கையைத் தரவிருக்கும் நிலாயில் ரங்கராஜன் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது ராஜினாமாவுக்கான காரணங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், அவரை ராஜ்யசபா எம்பியாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications