ஒருவழியாய் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் தங்கபாலு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு பொறுப்பேற்ற பின் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டப்பட்டுள்ளது.
தங்கபாலு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு வாசன், இளங்கோவன் உள்ளிட்ட பல கோஷ்டிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாசன் கோஷ்டியினர், பல இடங்களில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை ஏற்றி தங்கபாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகியும் கூட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை தங்கபாலு கூட்டாமல் இருந்து வந்தார். காரணம், அதில் பெரும்பாலானவர்களுக்கு அவருக்கு எதிராக உள்ளது தான்.
இந் நிலையில் முதல் முறையாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை சத்தியமூர்த்தி பவனில் கூட்டியுள்ளார். நாளை (9ம் தேதி) வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியதை நினைவுகூரும் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கவும், மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்துப் பேசவும் இக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இக் கூட்டத்திற்கு சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் தலைமை வகிக்கிறார்.
கோஷ்டிகளின் வேட்டிகள் பத்திரம்...!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications