சான்றிதழுக்கு ரூ.500 லஞ்சம்-விஏஓ கைது!
சிவகங்கை: திருப்பத்தூர் அருகே சான்றிதழ் தர ரூ. 500 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஒருவரை நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது மகிபாலன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தேசிய வங்கியில் தொழில் தொடங்க கடன் கேட்டார். அதற்கு வங்கி அதிகாரிகள் சில சான்றிதழ்களைக் கேட்டனர்.
தேவையான சான்றிதழ் கேட்டு எஸ். வேலாங்குடி கிராம நிர்வாக அதிகாரி காந்தியை அனுகினார். அப்போது சான்றிதழ் கொடுப்பதற்காக செந்தில் குமாரிடம் காந்தி ரூ 500 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
பின்னர் அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயண மை தடவிய ரூ 500 பணத்தை கிராம நிர்வாக அதிகாரி காந்தியிடம் கொடுத்தார். அப்போது அவரது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் டி.எஸ்.பி குமாரசாமி, இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், ராஜா மற்றும் ஏட்டுகள் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி காந்தியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications