புயல் சின்னம்: ஆந்திராவில் கன மழை - 16 பேர் பலி
ஹைதராபாத்: ஆந்திராவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். பல கிராமங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.
வங்கக் கடலில் வட மேற்கு மற்றும் மேற்கு மத்திய கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆந்திராவில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் ஆந்திராவின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
இதில் ஹைதராபாத்தில் 7 பேரும், மேடக் மாவட்டத்தில் 3 பேரும், விஜயவாடா, நல்கொண்டா, ரங்காரெட்டி மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்தனர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் உயிர்ப் பலி உயரும் என அஞ்சப்படுகிறது.
சுவர்கள் இடிந்து விழுந்துதான் பலர் பலியாகியுள்ளனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அவை மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் தகவல் தொடர்பு, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழை நீர் வடியாததால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும்...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர்தேங்கிக் கிடக்கிறது. பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.
இன்றும் காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications