செம்மொழி: தமிழக லாரிகள் மீது கன்னடர்கள் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கு தமிழகம் தடையாக இருப்பதாக கூறி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. தமிழக லாரிகள் மீது கல்வீச்சு தாக்குதலையும் நடத்தின.

தமிழுக்கு வழங்கப்பட்டதை போல கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசின் குழு தன்னுடைய முடிவை விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த இரு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. கர்நாடக ரக்ஷ்ண வேதிகே அமைப்பினர் கர்நாடகாவில் நேற்று போராட்டம் நடத்தினர். நாராயண கௌடா தலைமையில் அந்த அமைப்பினர் பெங்களூருவில் தமிழக ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர்.

சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த லால்பாக் எக்ஸ்பிரஸை மறித்து போராட்டம் நடத்தினர். தமிழுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து சென்னை மற்றும் சதாப்தி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களையும் மறித்தனர். இந்த திடீர் போராட்டத்தால் ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

தமிழக பஸ் போக்குவரத்தும் இதில் பாதிக்கப்பட்டது. மெஜஸ்டிக்கில் உள்ள தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்துக்கு தமிழகத்தில் இருந்து வந்த பஸ்கள் மைசூர் சாலையில் உள்ள சாட்டிலைட் பஸ் நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

தமிழக பஸ்களை கன்னட ரக்ஷ்ண வேதிகே அமைப்பினர் தாக்கக் கூடும் என்று போலீசாரும் போக்குவரத்து துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். மாலை 5 மணிக்கு மேல் வழக்கம்போல தமிழக பஸ்கள் மெஜஸ்டிக் பஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

மைசூர், சென்னப்பட்டிணாவில் நடந்த போராட்டங்களில் தமிழக பதிவு எண் கொண்ட இரண்டு லாரிகளை கற்களை வீசி கன்னட ரக்ஷ்ண வேதிகே அமைப்பினர் தாக்கினர். இதில் லாரி கண்ணாடிகள் நொறுங்கின. ஹாசனில் நடந்த போராட்டத்தில் தமிழக லாரிகள் மறிக்கப்பட்டன.

தமிழக லாரிகளுக்கும் டிரைவர் மற்றும் கிளினர்களுக்கும் கர்நாடகாவில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கர்நாடக லாரி டிரைவர் மற்றும் கிளினர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+