வட இந்தியர்களுக்கு ராஜ் தாக்கரே மீண்டும் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

மும்பையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசுகையில், உ.பி., பீகார் மாநிலத்தைச் ேசர்ந்த மாணவர்கள் முதலில் மும்பையில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கொள்கிறார்கள். பின்னர் இங்கேயே வேலையையும் வாங்கிக் கொண்டு குடும்பத்தோடு
செட்டிலாகி விடுகிறார்கள்.
இவர்களால் மும்பை மாநகருக்கு சுமைதான் கூடுகிறதே தவிர எந்த பலனும் ஏற்படுவதில்லை. இனிமேலும் இத்தகைய நிலையை பொறுத்துக் கொள்ள முடியாது. தேவைப்படும்போது அவர்களுக்கு சரியான பதிலடி தரப்படும்.
ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் மும்பை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வர்த்தக நிறுவனங்களில் மராத்தியில் பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். இது நாங்கள் விடுக்கும் இறுதிக் கெடு. அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார் ராஜ் தாக்கரே.












Click it and Unblock the Notifications