அந்தமானில் பயங்கர நிலநடுக்கம் - மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

Andaman
போர்ட் பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று பிற்பகல் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி தாக்கக் கூடுமோ என்று மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டராக பதிவாகியுள்ளது. இதனால் அந்தமான் முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது.

போர்ட்பிளேரிலிருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

இன்று பிற்பகல் 1.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6 முதல் 7 விநாடிகளுக்கு உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தையடுத்து வீடுகள், கட்டடங்களிலிருந்து மக்கள் பீதியுடன் வெளியில் ஓடி வந்தனர். சுனாமி அலைகள் தாக்கக் கூடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று தெரிகிறது.

வட அந்தமான் பிராந்தியம் முழுவதும் நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது. அதேபோல தலைநகர் போர்ட்பிளேரிலும் உணரப்பட்டுள்ளது.

மீண்டும் குலுங்கியது:

இந்த நிலையில் மாலை 3.10 மணிக்கு தொடர்ச்சியான நில அதிரிவு ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 5.4 ஆக இருந்தது. இதன் மையப் பகுதி போர்ட்பிளேரிலிருந்து 145 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

மீண்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதால் அந்தமான் முழுவதும் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பலர் வீடுகளுக்குள் போகாமல் தெருவிலேயே காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+