ரேஷன் கார்டுகளை திருப்பி தந்து போராட்டம்
Subscribe to Oneindia Tamil
முதுகுளத்தூர்: போதிய சாலை வசதி செய்துதராத திமுக அரசைக் கண்டித்து முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இராமநாதபும் மாவட்டம் முதுளத்தூர் வட்டத்தில் உள்ளது பொந்தம்புளி கிராமம். இங்கு நூற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் உள்ளனர். இந்த மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.
இந்த ஊரில் சாலை வசதி இல்லை. இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு சாலை வசதி கோரி மக்கள் மனு கொடுத்தும் பலனில்லை. இதை கண்டித்து பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர் தங்கமுத்து தலைமையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற உள்ளனர்.
மேலும் தங்களது குடும்ப அட்டைகளையும் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் திருப்பி ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications