ஆஸி. பெண் கற்பழித்து கொலை-இருவருக்கு தூக்கு
டெல்லி: இந்தியா வந்த ஆஸ்திரேலிய பெண் சுற்றுலாப் பயணியை கற்பழித்து கொலை செய்த 2 டாக்ஸி டிரைவர்களுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டான் எமிலி கிரிக்ஸ் (59). கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி ஹாங்காங்கில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய சில மணி நேரத்தல் எமிலி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.
எமிலியை கற்பழித்து படுகொலை செய்த டாக்ஸி டிரைவர்கள் ஜோதீஷ் பிரசாத் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நீதிபதி வினோத்குமார் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். எமிலியை கற்பழித்து கொலை செய்த இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்தார். மேலும் இருவருக்கும் தலா ரூ.3000 அபராதமும் விதித்தார்.












Click it and Unblock the Notifications