போலீஸ்காரரின் 'பல்' சாதனை-67 கிலோ..26 வினாடி!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் மாரியப்பன் என்பவர் 67 கிலோ எடையை பல்லால் தூக்கி சாதனை படைத்துள்ளார்.
கரூரில் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் மாரியப்பன். இவர் 67 கிலோ எடையை பல்லால் தூக்கி சாதனையை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி கரூர் மாவட்ட எஸ்பி சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.
மாரிமுத்து 67 கிலோ எடையை தனது பல்லால் ஒரு அடி உயரத்துக்கு, அதை 26 வினாடிகள் தூக்கி சாதனை படைத்தார். இதற்கு முன்பு கின்னஸ்சில் 67 கிலோ எடையை 17 சென்டி மீட்டர் உயரத்தில் தூக்கியது தான் சாதனையாக இருந்தது.
தற்போது அந்த சாதனையை போலீசார் மாரியப்பன் முறியடித்துள்ளார்.
இவர் ஏற்கனவே லிம்கா சாதனை உள்பட பல முக்கிய சாதனைகள் படைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications