அமைச்சரை கண்டித்து போராட்டம்-அனுமதி அதிமுக கோரி வழக்கு
நாகர்கோவில்:அமைச்சர் சுரேஷ்ராஜனை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அதிமுக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி அன்று அரசு சார்பில் கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், சப்-கெலக்டர் ஜனார்த்தனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது தன்னை ஜாதி பெயரை சொல்லி ஒருமையில் திட்டியதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது சப்- கலெக்டர் ஜனார்த்தனன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்தைக்கு பிறகு போலீசார் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர்கள் தமிழ்செல்வன், கிருஷ்ணதாஸ் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடந்த 5.8.2008 மற்றும் 6.8.2008 ஆகிய தினங்களில் அமைதி போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினோம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்துவிட்டனர். இது, ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமையை மறுப்பதாகும். எனவே அமைதியான வழியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. நீதி மன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிரான பேராட்டம் தீவிரமாகும் என்று தெரிகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications