ரகளை: 4 பா.ம.க. எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி நான்கு பாமக எம்.எல்.ஏக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஓமலூர் பஸ் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு பா.ம.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது, திடீரென ஒரு கும்பல் பா.ம.க. கொடிகளையும், டியூப் லைட் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது. கூட்ட மேடை அருகே கற்களும் வந்து விழுந்தன.
இதைக் கண்டித்து பா.ம.க. சார்பில் அங்கு சாலை மறியல் நடத்தப்பட்டது. அந்த மறியலை கலைக்க முயன்றபோது நடந்த தள்ளு முள்ளு சம்பவத்தில் 3 போலீசார் காயம் அடைந்தனர். டி.எஸ்.பி. லெனின் கார் கண்ணாடி உடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் நகர பா.ம.க. செயலாளர் ராஜேந்திரன், போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில், தி.மு.கவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், கோட்டகவுண்டன்பட்டி சீனி, கீழ்காமாண்டப்பட்டி மகேந்திரன், பெரியேரிப்பட்டி குப்புசாமி உள்பட 10 பேர் பா.ம.க. பொதுக் கூட்டத்தில் எங்களை பார்த்து நாங்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டி கொடிகளையும் மின் விளக்குகளையும் உடைத்து நொறுக்கினர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தி.மு.க. நகர செயலாளர் ரவிச்சந்திரன், உள்பட 10 பேர் மீது ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பதிலுக்கு திமுக ஒன்றிய செயலாளர் போத்தன் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ஓமலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, கண்ணையன், காவேரி, வேல்முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சண்முகம், பா.ம.க. இளைஞர் அணி அருள் ஆகியோர் கூட்டம் நடந்தபோது, 100 பேர் கடப்பாறை மற்றும் உருட்டுக்கட்டையுடன் வந்து தி.மு.கவை சேர்ந்த நகர செயலாளர் ரவிச்சந்திரன், பிரகாஷ், பெரியசாமி ஆகியோரை மிரட்டியும் கடைகளில் பொருட்களை அடித்து நொறுக்கியும் உடைத்தனர்.
சிவக்குமாரின் தங்க செயினையும் பறித்தனர் என்று புகாரில் அவர் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில், எம்.எல்.ஏக்கள் தமிழரசு, கண்ணையன், காவேரி, வேல்முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் ஆகியோர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications