ஒகேனக்கல்-முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட எதியூரப்பா கோரிக்கை
டெல்லி: ஒகேனக்கல் பிரச்சனை உள்பட அண்டை மாநிலங்களுடான பிரச்னைகளுக்கு தீர்வு காண முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக திட்ட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் எடியூரப்பா டெல்லி சென்றார். அங்கு அவர் கூறியதாவது:
காவிரி படுகையில் பாசனத் திட்டங்களை மேற்கொள்ள என்த நிபந்தனையும் இல்லாமல் நிதி ஒதுக்குமாறு திட்டக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது சிறிய நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானாலும் காவிரி நடுவர் மன்றத்தின் அனுமதியை பெற வேண்டியுள்ளது.
ஒகேனக்கல் யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க கூட்டு சர்வே நடத்தப்பட வேண்டும். கூட்டு சர்வே நடத்துவதற்கு முன் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளேன்.
இதுதொடர்பாக தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகனை கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் கொய்னா அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் கிருஷ்ணா ஆற்றில் நீரைத் திறந்து விடுவதால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிடப்பட்டது.
இதுபோன்ற அண்டை மாநில பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அண்டை மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications