'குண்டாஸ்'-மறு ஆய்வு குழு முன் காடுவெட்டி குரு!
சென்னை: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்ட மறு ஆய்வுக் குழுவின் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக திருச்சி சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
வன்னியர் சங்கத் தலைவரும், பாமக பொருளாளருமான காடுவெட்டி குரு 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டமும் அவர் மீது பாய்ந்தது.
இதை எதிர்த்து தேசிய பாதுகாப்பு சட்ட மறு ஆய்வு குழுவில் குரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட மறு ஆய்வு குழு, குருவை தங்கள் முன் இன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
இதையடுத்து காடுவெட்டி குருவை திருச்சி மத்திய சிறையிலிருந்து நேற்று இரவு போலீஸார் சென்னை கொண்டு வந்தனர். புழல் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
இன்று பகல் 1 மணியளவில் குரு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கூவம் பயணியர் விடுதியில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்ட மறு ஆய்வு குழு முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
குரு வேனை மறிக்க பாமகவினர் முயற்சி:
முன்னதாக நேற்றிரவு திருச்சி சிறையில் இருந்து சென்னைக்கு குரு கொண்டு செல்லப்படும் தகவல் பாமகவினரடையே பரவியது. இதையடுத்து சிறையில் இருந்து குரு எழுதிய கடிதங்களை பாமகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினர்.
அதில், அன்பு நெஞ்சங்களே, என் உடலை சிறையில் அடைத்தாலும், உயிரை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியாது. மாபெரும் லட்சிய வெற்றிக்கு உயிரே, உணர்வே, பொங்கி எழு. திருச்சி மத்திய சிறையில் இருந்து காடுவெட்டி குரு. என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் விழுப்புரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
காடுவெட்டி குரு அழைத்து வரப்பட்ட வேன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில உணவுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது மேல்மலையனூர் பாமக எம்எல்ஏ செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் குருவை சந்தித்தனர்.
விழுப்புரத்தில் குரு வரும் வேனை மறித்து அவரை சந்திக்க சுமார் 50 பாமகவினர் காத்திருந்தனர். ஆனால் போலீசார் வேனை நிறுத்தாமல் சென்றனர். இதுபோல அங்கங்கு பாமகவினர் வேனை மறிக்க முயன்றதால் திண்டிவனம் வழியாக செல்லாமல் புதுச்சேரி சென்று அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக குரு சென்னை கொண்டு செல்லப்பட்டார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications