கேரளா: கன்னியாஸ்திரி தற்கொலை-பாலியல் சித்திரவதையா?
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடிவிசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கொல்லம் மாவட்ட பிஷப் வீட்டில் சமையல்காரராக இருப்பவர் பாப்பச்சன். இவரது மகள் அனுபா. 23 வயதான அனுபா கன்னியாஸ்திரி ஆவார். கொல்லத்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அப்பள்ளியில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு அனுபா தற்கொலை செய்து கொண்டார்.
அவரது அறையில் வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தில், இங்குள்ள சூழலுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. மதர் சுப்பீரியருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்துள்ளார் அனுபா.
ஆனால் தனது மகள் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக பாப்பச்சன் குற்றம் சாட்டியுள்ளார். மகளுடன் தங்கியிருந்த ஒரு கன்னியாஸ்திரி, ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் அச்சுதானந்தனையும் சந்தித்து அவர் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்துஅவர் கூறுகையில்,அங்குள்ள கன்னியாஸ்திரி ஒருவர் எனது மகளுடன் பாலியல் உறவுக்கு வற்புறுத்தி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து தனது டைரியில் எனது மகள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அனுபா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில மகளிர் ஆணையமும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications