வெடிகுண்டு புரளி-பிஎஸ்என்எல் ஊழியர் கைது

நெல்லை மாவட்டம் தீவிரவாதிகளின் டார்கெட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நெல்லையில் உச்சகட்ட பாதுகாப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பள்ளிகளில் வெடிகுண்டு புரளி கிளப்பப்படுவதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் தென்காசி காவல் நிலையத்திற்கு ஒரு மர்ம போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், குற்றாலம் சாரல் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலைவாணர் கலையரங்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடு்த்து பாருங்கள். சுதந்திர தினவிழாவிற்குள் எங்கேயாவது வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு சொல்லி போனை வைத்து வி்ட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனை கலைவாணர் கலையரங்கிற்கு போலீஸார் விரைந்தனர். அங்கு பொதுமக்களிடையே பீதி ஏற்படாத வகையில் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றாலத்தைச் சேர்ந்த குமார கணேசன் என்பவரை கைது செய்தனர். இவர் செங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து நெல்லை எஸ்பி தினகரன் கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications