கர்நாடகத்தில் கன மழை-ஓகனேக்கலில் வெள்ளம்
ஓகனேக்கல்: கர்நாடக அணைகளிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஓகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளக் காடாகியுள்ளது. காவிரிக் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த சிலநாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே ஹோரங்கி, கபிணி ஆகிய அணைகள் நிரம்பி விட்டன.
தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பும் தருவாயை எட்டியுள்ளது. மொத்தம் 123 அடி கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை தற்போது 122 அடியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகரிலிருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஓகனேக்கலுக்கு பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அங்குள்ள அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஓகனேக்கலிலும் மழை பெய்துவருவதால் அங்கு வெள்ளக் காடாகியுள்ளது. இதனால் பரிசல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரையோரங்களில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இனறு மாலை முதல் மேட்டூர் அணைக்கு பெருமளவில் நீர்வரத்து இருக்கும் என்பதால் மேட்டூர் அணையும் ேவகமாக நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications