மருத்துவ கல்லூரிகள்: அரசு துணை போவதன் ரகசியம் என்ன?-விஜய்காந்த்
சென்னை: மருத்துவ கல்லூரிகள் தொடங்க எந்த அடிப்படையில் தடையில்லா சான்று வழங்கப்படுகிறது, அவ்வாறு வழங்கும்போது குறிப்பிட்ட இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும் என்று ஏன் நிபந்தனை விதிக்கக் கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்விகள் எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயர் கல்வியில் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதில்லை. உயர் கல்வி நிலையங்களை தனியார் நடத்தினால் ஏழைகளுக்கு இடம் கிடைக்காது என்பதால்தான் அரசுக் கல்லூரிகளை தனியார் மயமாக்க வேண்டாம் என்று கூறுகிறேன். அரசாங்கமே சொந்தமாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் நடத்தினால் நலிவுற்ற இந்த பிரிவினருக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய முடியும்.
தற்போது செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறி விட்டதால் கடந்த ஆண்டு அவர்கள் அரசுக்கு வழங்கிய 83 இடங்கள் இந்த ஆண்டு இல்லாமல் போய்விட்டன. அங்கு இட ஒதுக்கீடு முறையையும் அமல் செய்ய முடியாது.
கடந்தாண்டு 5 மருத்துவ கல்லூரிகள் தொடங்க தமிழ்நாடு அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. சவீதா பல்கலைக்கழகம், ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி உள்ளிட்ட எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது.
இதில் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி அரசுக்கு இடங்கள் தந்துள்ளது.
மற்ற இரண்டும் பல்கலைக்கழகங்கள் என்பதால் அரசுக்கு இடம் தரவில்லை. கற்பக விநாயகர் மற்றும் சத்தியசாய் மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்துள்ளன.
மருத்துவ கல்லூரிகள் தொடங்க அரசு எந்த அடிப்படையில் தடையில்லா சான்றிதழ் வழங்குகிறது என்பது தெரியவில்லை. அத்தகைய சான்றிதழ்கள் வழங்குகின்றபோது, ஒரு குறிப்பிட்ட சதவிகித இடங்களை அரசுக்கு வழங்க வேண்டுமென்று ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது?.
தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்கும்போது அரசுக்கு இடங்களை தந்துவிட்டு, பிறகு நிகர்நிலை பல்கலைக்கழகம் என்று மாற்றி விட்டு, ஏற்கனவே தந்த இடங்களையும் தர தனியார்கள் மறுக்கிறார்கள். இதற்கு அரசும் துணை போவதன் ரகசியம் என்ன?.
சில மாநிலங்களில் நிபந்தனையோடு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுவது தமிழ்நாடு அரசுக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டதா? தெரிந்தே மறைத்து விட்டார்களா?. இதை முன்பு நான் சொன்னபோது உயர்கல்வித் துறை அமைச்சர் பல மறுப்பு அறிக்கைகள் வெளியிட்டார்.
இன்று தனியார் வாசலில் இழந்த மருத்துவ இடங்களைப் பெற அரசே காத்து கிடப்பதிலிருந்து நான் சொன்னது சரியாகிவிட்டது அல்லவா?. ஏழை, எளிய மக்களை எத்தனை காலத்திற்குத்தான் ஏமாற்றுவது? என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications