ஆக-17ல் சந்திர கிரகணம்-வெறும் கண்களால் பார்க்கலாம்
டெல்லி: வரும் 17ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதிகாலை ஏற்படும் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழும். அதுதான் சந்திர கிரகணம். வரும் 17ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்தியாவில் இது பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். சூரிய கிரகணம் போல் இல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம். இதனால் கண்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
17ம் தேதி அதிகாலை 1:06 மணிக்குத் தொடங்கி 4:14க்கு முடிகிறது. 80 சதவீதம் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். 2:40 மணிக்கு சந்திர கிரகணம் ஓரளவுக்கு முழுமையாக, அதாவது 80 சதவீதம் ஏற்படும். இதை அனைவரும் கண்டு ரசிக்கலாம் என்று டெல்லியில் உள்ள நேரு கோளரங்க இயக்குனர் ரத்னஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் முழுமையாக கிரகணத்தை கண்டு ரசிக்க முடியும்.
16ம் தேதி மாலை சந்திரோதயத்தின்போது தென் அமெரிக்காவிலும், 17ம் தேதி சந்திர அஸ்தமனத்தின்போது ஆஸ்திரேலியாவிலும் கிரகணத்தை பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆடி மாதத்திலேயே சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் ஏற்படுவதால், மழை, நிலநடுக்கம் போன்றவை ஏற்படும். அரசியலில் குழப்பங்கள் நிலவும் என்று ஜோதிடர்கள் பீதியைக் கிளப்பியுள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications