பிஎஸ்என்எலை புறக்கணித்த தெற்கு ரயில்வே
சென்னை: அலுவலர்களுக்கு செல்போன் இணைப்பு வழங்கும் உரிமையை ஏர்டெல் நிறுவனத்துக்கு அனுமதித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தை புறக்கணித்துள்ளது தெற்கு ரயில்வே.
கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் சுமார் 5,000 அலுவலர்களுக்கு முதன் முறையாக செல்போன் இணைப்பு வழங்கப்பட்டது.
இதில் சென்னை மற்றும் தமிழகம், புதுச்சேரி தொலைத் தொடர்பு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயில்வே அலுவலர்கள் 3,050 பேருக்கு செல்போன் இணைப்புக்கான சிம்கார்டுகளை பிஎஸ்என்எல் வழங்கியது.
இந்த சிம்கார்டுகளைப் பெற்றுள்ள தெற்கு ரயில்வே அலுவலர்கள், தங்களுக்குள் கட்டணம் மற்றும் கால வரம்பின்றி தொடர்பு கொண்டு பேசும் வகையில் ஒருங்கிணைந்த "விடிஎன்-சியூஜி' வசதியைப் பெற்றனர்.
மேலும் இதர செல்போன் இணைப்புகளுடன் மாதம் தோறும் ரூ.300 வரை பேசுவதற்கும் சலுகை அளிக்கப்பட்டது. இந்த பிளான் 525 திட்டத்தின் கீழ் ரயில்வே அலுவலர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளையும் பிஎஸ்என்எல் வழங்கியது.
இந்நிலையில், கடந்த ஜூலை தொடக்கத்தில் பிஎஸ்என்எல் வழங்கிய சேவையை தெற்கு ரயில்வே முடிவுக்குக் கொண்டு வந்தது. இதையடுத்து ஜூலை 7ம் தேதி முதல் தனது அலுவலர்களுக்கு சிம்கார்டுகளை வழங்குமாறு ஏர்டெல் நிறுவனத்துக்கு தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியது. இது பிஎஸ்என்எல் நிறுவத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கட்டண விகிதம் அதிகமாக இருப்பதை காரணமாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கட்டண விகிதத்தை குறைக்கவும் பிஎஸ்என்எல் முன்வந்தது.
ஆனால், ரயில்வே வாரியத்தின் உத்தரவின்பேரில், சிம்கார்டு வழங்க ஏர்டெல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தங்களது நிலையைத் தெரிவித்தனர்.
இதனால், ரயில்வே துறை மூலம் கிடைக்கும் ரூ.3 கோடியை பிஎஸ்என்எல் இழந்துள்ளது. அரசுத் துறைகளே ஒன்றுக்குள் ஒன்று புறக்கணித்திருப்பது அதிர்ச்சியளிப்பாதாக இருதரப்பு ஊழியர்களும் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications