பாக். சுதந்திர தினம் - புறக்கணித்தார் முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் அதிபர் பர்வேஸ் முஷாரப் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் இன்று 62வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கராச்சியில் உள்ள முகம்மது அலி ஜின்னா நினைவிடத்தில் பல்ேவறு கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதிபர் முஷாரப்மட்டும்கலந்து கொள்ளவில்லை.
தன் மீது ஆளுங் கூட்டணி நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதால் நிகழ்ச்சியை அவர் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி
இந்த நிலையில் நேற்று இரவு லாகூரில் உள்ள காவல்நிலையம் அருகே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 போலீஸார் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
உடல் முழுக்க வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்த தீவிரவாதி, அதை வெடிக்கச் செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications