பதவியை காக்க மீண்டும் காஷ்மீர் விவகாரம்-முஷாரப்பின் சுயநலம்

இன்று பாகிஸ்தானி்ன் 61வது சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், மாகாண கவர்னர்களம மத்தியில் உரையாற்றினார். இதை அந் நாட்டு தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நேரடியாக ஒளி-ஒலி பரப்பின. (இதற்கு அரசிடம் அனுமதி பெறவே அவர் பெரும்பாடுபட்டது குறிப்பிடத்தக்கது). அப்போது அவர் கூறியதாவது:
ஸ்ரீநகரில் அல்லது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் 22 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். (அமர்நாத் நில விவகாரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை சொல்கிறார்). இந்த மனித உரிமை மீறல்களையும், ஜம்மூ-காஷ்மீரில் நடந்து வரும் கொலைகளையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பாகிஸ்தானின் இதயத்தில் காஷ்மீரின் இதயத் துடிப்பு உள்ளது. அனைத்து பாகிஸ்தானியர்களும் காஷ்மீரிகளுக்கு உறுதுணையாக உள்ளனர். காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு ஒவ்வொரு பாகிஸ்தானியரும் துணை நிற்பர்.
பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தீவிரவாதத்தை எதிர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம். இதற்கு நம் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மோதல் போக்கை கைவிட்டு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுட் நடந்து கொள்ள வேண்டும் (தனது பதவியை பறிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறார்).
நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை நாம் மறக்க வேண்டும் என்றார்.
ஆனால் தனது பதவி குறித்தோ, ராஜினாமா முடிவு குறித்தோ, எதிர்கால திட்டம் குறித்தோ அவர் ஏதும் பேசவில்லை. இதன்மூலம் கண்டனத் தீர்மானத்தை எதிர்கொள்ளவும், அதே நேரத்தில் பதவியில் நீடித்து அரசுடன் மோதவும் அவர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியா கண்டனம்:
இதற்கிடையில், காஷ்மீர் கலவரத்தில் ஹுரியத் தலைவர் உள்பட பலர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் உண்மைக்கு மாறான அர்த்தமற்ற விவாதத்தை மீண்டும் பாகிஸ்தான் தொடங்க நினைக்கிறது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச தலையீட்டை கோரும் பாகிஸ்தானின் முயற்சி சட்டவிரோதமானது.
இதனால் இதுபோன்ற கண்டனத்துக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications