இந்திய சுதந்திர தினம்: ஜார்ஜ் புஷ் வாழ்த்து
வாஷிங்டன்: இந்தியாவின் 62வது சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் புஷ்ஷின் அலுவலகம் இந்திய- அமெரிக்க சமுதாயத்திற்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், இந்தயாவின் 62வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
இந்த நேரத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு சிறப்பாக இருப்பது அனைவராலும் நினைவு கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
விடுதலையை நோக்கிய இந்தியாவின் பயணம் மிகப் பெரிய வரலாறு. ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம் அது. மகாத்மா காந்தி தலைமையில் அமைதி வழியிலும், வன்முறையற்ற பாதையிலும் பீடு நடை போட்டு சாதித்த விடுதலை இந்தியாவின் விடுதலை.
1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா விடுதலை பெற்றது, தனது லட்சியத்தை அடைந்தது. ஜனநாயக நாடாக மலர்ந்தது. இதன் மூலம் விடுதலை கிடைப்பது தாமதமாக ஆனாலும், அது மறுக்கப்படாது என்ற உயரிய தத்துவம் வெளிப்படுகிறது.
அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்திய அமெரிக்கர்களின் பங்கு மிகப் பெரியது. இந்திய அமெரிக்கர்களின் பங்களிப்பை நாம் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுக்கு இந்திய அமெரிக்கர்கள் மிகச் சிறந்த முறையில் பங்காற்றி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் நானும், லாராவும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் புஷ்.
ஒபாமா வாழ்த்து:
அதே போல இந்திய சுதந்திரத்தையொட்டி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமாவும் நாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
21ம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை இந்தியா-அமெரிக்கா இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications