அகமதாபாத் குண்டுவெடிப்பு - 10 பேர் கைது - ஐஎஸ்ஐக்கு தொடர்பு

Subscribe to Oneindia Tamil

Arrested SIMI cadres
அகமதாபாத்: அகமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக சிமி இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தொடர்பு இருப்பதாக குஜராத் டிஜிபி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 26ம் தேதி அகமதாபாத் நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 55 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குஜராத் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இக் குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படும் முப்தி அப்துல் பாஷர் இஷாலி உள்ளிட்ட சிமி இயக்கத்தைச் ேசர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் போலீஸார் தெரிவித்துள்ளனர். பாஷர் லக்னோவில் உ.பி. போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து குஜராத் டிஜிபி பி.சி.பாண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) திட்டமிட்ட சதிச் செயல் இது. இந்த அமைப்பு விசாரணையைக் குழப்புவதற்காக இந்தியன்முஜாஹுதின் என பெயரை மாற்றிக் கொண்டு இந்த சதிச் செயலை அரங்கேற்றியுள்ளது.

இந்த சதிச் செயலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும் தொடர்பு இருப்பதற்கான தொடர்புகள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

இந்த சதிச் செயலின் முக்கிய மூளையாக அப்துல் பாஷர் செயல்பட்டுள்ளார். இவருக்கு ஐஎஸ்ஐ பயிற்சி அளித்துள்ளது. குஜராத் உள்பட பல மாநிலங்களில் பல தீவிரவாத குழுக்களை இவர் ஏற்படுத்தியுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் வனப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிமி தீவிரவாதிகளுக்கு கடந்த மார்ச் மாதம் பயிற்சி அளித்துள்ளார். அவர்களுக்கு சிமியின் தலைவர் சப்தர் நகோரிதான் தீவிரவாதப் பயிற்சியை வழங்கினார்.

இதுதவிர குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் ஏப்ரல் மாதம் தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள ஹலோல் வனப்பகுதியில் இந்த பயிற்சி வகுப்பு நடந்துள்ளது.

நேற்று கைதானவர்களில் பாஷர் தவிர மற்றவர்களின் பெயர்கள் வருமாறு: ஜாகிகத் ஷேக் (சதிச் செயலில்முக்கியப் பங்காற்றியுள்ளார்), யூனிஸ் மன்சூரி, சம்சுதின் ஷேக், ஆரிப் காத்ரி, கியாசுதின் (அனைவரும் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள்), சஜித் மன்சூரி, இம்ரான், உஸ்மான் அகர்பத்திவாலா, இக்பால் ஷேக் (அனைவரும் வதோதராவைச் சேர்ந்தவர்கள்).

கடந்த காலங்ளில் ஜெய்ப்பூர், மும்பை, மாலேகான், பெங்களூர் உள்ளிட்ட 11 நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களை ஆராய்ந்து பார்த்ததில் சில முக்கிய துப்புகள் கிடைத்தன. அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டதில் 10 பேரும் சிக்கினர்.

அப்துல் பாஷரை விரைவில் அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணைக்கு அழைத்து வரவுள்ளனர்.அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அப்துல் பாஷர், அஸம்கர் மாவட்டம், பினாபாரா கிராமத்தைச் ேசர்ந்தவர். இவர் அங்குள்ள மதரசாவில் முப்தியாக இருந்தார். அபு பக்கர் என்பவரின் மகன் இவர்.

அகமதபாத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் சூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்காத குண்டுகள் அனைத்தும் சிமி இயக்கத்தினரால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

இருப்பினும் அகமதாபாத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் டைம் பாம் வகையைச் ேசர்ந்தவை ஆகும். சூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை மைக்ரோ சிப்பில் பொருத்தப்பட்டவை ஆகும். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவை வெடிக்காமல் போய் விட்டன.

தொடர் குண்டுவெடிப்புக்கு முன்னதாக அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட இடங்களில் பலமுறை கூடி இக்கும்பல் திட்டமிட்டுள்ளது. வெடிகுண்டுகளையும் தயாரித்துள்ளனர். அதுதொடர்பான உதிரி பாகங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பின்போது பயன்படுத்தப்பட்ட சைக்கிள்கள் மற்றும் கார்களை நவி மும்பையிலிருந்து திருடியுள்ளனர். பாருச் பகுதியில் இவற்றை மறைத்து வைத்திருந்து பின்னர் அகமதாபாத் கொண்டு வந்துள்ளனர்.

குண்டுவெடிப்புக்கு முன்னர், அகமதாபாத்தில் உள்ள யூனிஸின் வீட்டில் கூடி இறுதி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு தவிர மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தி மக்களிடையே குழப்பத்ைத விளைவிக்க பாஷர் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது என்றார்.

போலீஸ் காவல்:

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அகமதாபாத் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரினர்.

இதையடுத்து 14 நாள் போலீஸ் காவலுக்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து தீவிரவாதிகளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+